இந்தியா

மோடியின் அதிரடி அடி பணியும் பாகிஸ்தான்! முதன் முதலாக பாகிஸ்தான் செய்த காரியம் என்ன தெரியுமா?

புல்வாமா தாக்குதலைப் போன்று மற்றுமொறு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தனக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலை இந்தியா, அமெரிக்காவிடம் முதன் முதலாக பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதி ஜாகிர் முசாவை கடந்த மாதம் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இதற்கு பழி வாங்கும் விதமாக அவந்திபுரா நெடுஞ்சாலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தனக்கு கிடைத்த புலனாய்வு தகவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசின் இந்த எச்சரிக்கையை அடுத்து அப்பகுதியில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புல்வாமா சம்பவத்தை அடுத்து இந்தியா கடும் நெருக்கடி கொடுத்து வருவதை அடுத்து பாகிஸ்தான் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close