செய்திகள்விளையாட்டு
Trending

துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடிய பாகிஸ்தான் : தெறிக்க விட்ட இந்தியா, பட்டையை கிளப்பிய தமிழக வீரர்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.16) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்ஃபரஸ் அஹ்மது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதியுள்ளன.

இதுவரை மூன்று போட்டிகளில் களம் கண்டுள்ள இந்திய அணி, இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் இதுவரை 4 போட்டிகளில் ஆடி, இரண்டு தோல்வியும், ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்களை குவித்தது. 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணியின் மிகப்பெரிய  பலமாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 140 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  113 பந்துகளுக்கு ரோகித் 140 ரன்களை குவிந்திருந்தார். இதில் 3 சிக்ஸ்கள் மற்றும் 14 பவுண்ட்ரிகளும் அடங்கும். 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் அடுத்தாக களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. விஜய் சங்கரும், பும்ராவும் பவ்லிங்கில் டாக் செய்தனர்.

35 ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11.40-க்கு தள்ளி வைக்கப்பட்டது. டி.ஆர்.எஸ். முறைப்படி 40 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. அதன்படி 5 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 136 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரில், பாகிஸ்தான் அணி 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அதை எடுக்க முடியாமல், 40 ஓவர் முடிவில் 212 ரன் எடுத்து பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

Show More

One Comment

  1. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான அட்ட்த்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்களை முழுத்திறமையுடன் விளையாட வைத்தனர். ஆகவே இது போன்று எள்ளி நகையாடும் தலைப்புகளை தவிருங்கள். இல்லாவிட்டால் செய்தியின் தரம் குறையும். கதிரின் பொது மரியாதைக்கு இழப்பு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close