செய்திகள்தமிழ் நாடு
Trending

“மஹாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி” : திருமாவளவன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு. கண் கட்டி வாய் மூடிக்கொண்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ்

இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக்நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, சிறப்புரை என்ற பெயரில் ஹிந்து மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.


அப்போது மத கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசுகையில், “இந்து வெறியர் பா.ஜ.க-வின் சனாதன கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால் தான் நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும்.


காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி”, என்று அவர் பேசினார்.

திருமாவளவனின் இந்த மத வெறி பேச்சுக்கு எதிராக இந்து மக்கள் முன்னணி சார்பில் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கருத்துத் தெரிவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்து மக்கள் முன்னணி புகார் அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியோ அல்லது தி.மு.க-வோ, இதற்கு எதிராக ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close