இந்தியா

அயோத்தியில் தாக்குதல் நடத்தி கலவரங்களை உண்டாக்க லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கர சதி!! உளவுத்துறை எச்சரிக்கை !

அயோத்தியில் மிகப் பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அயோத் தியில் பேருந்து, ரயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த லஷ்கர்-ஈ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தெரி வித்தது. நேப்பாளத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்று அங்கு உள்ள அம்பேத்கர் நகர், ஃபைஸா பாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங் களிலும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை கூறியது.

இந்தப் பகுதிகளில் இருந்து இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈடுபடுத்தும் பணியில் முகமது உமர் மத்னி என்பவர் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனிடையே 2005 அயோத்தி பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான தீர்ப்பு ஜூன் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த ஜூன் 2005ல் நடந்த இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக சர்வ தேச பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் பயங்கரவாதிகள் நான்கு பேரும் கைது செய்யப் பட்டனர். இந்தச் சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி யின் 18  எம்பிக்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்திக்குச் செல்கிறார் என அக்கட்சி தெரி வித்துள்ளது. 

அயோத்தியில் சர்ச் சைக்குரிய இடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந் தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட உள்ளார் எனக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  உத்தவ் தாக்கரே மற்றும் அவருடன் வரும் எம்பிக்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என மாநில அரசு கூறியது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close