செய்திகள்

சர்ச்சுகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை! தான் ஒரு கிறிஸ்துவர் என்று ஒப்புக்கொண்ட பா.ரஞ்சித் போராடாதது ஏன்?

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்று சொல்லித்தான் ஆதி திராவிட மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர்கள். ஆனால் அந்த கிறிஸ்தவ மதத்தில், உலகம் முழுவதும் 33,830 சாதிகள் உள்ளன. நமது நாட்டிலும் கிறிஸ்தவர்கள், ஜாதி அடிப்படையில்தான் செயல்படுகின்றனர். அதிலும் குறிப்பாக ஆதி திராவிட மக்கள், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகு மிகப்பெரிய தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

உடையார்கள் அதிகமாக உள்ள கிராமத்தில் ஒரு தலித் பாதிரியாராக இருக்க முடியாது.  அதையும் மீறி ஒரு தலித் பாதிரியார் இருந்துவிட்டால், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் உடையார் சாதியை சேர்ந்த பாதிரியாரை அழைத்து வந்தே நடத்துகின்றனர். இது போலத்தான் மற்ற உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் உள்ள கிராமங்களில் தலித் பாதியார்களின் நிலைமை கீழ்தரமாக உள்ளது.

வேளாங்கண்ணி போன்ற புகழ்பெற்ற சர்ச்சுகளில் ஒரு தலித்தை பாதிரியாராக நியமிக்கவே முடியாத காரியம். இங்கு இதுவரை ஒரு தலித் பாதிரியாரை நியமித்ததே இல்லை என்கின்றனர். இதைவிடக் கொடுமை, வேளாங்கண்ணி சர்ச் விழாவின் போது தலித்துகளுக்கு என்று தனியாக ஒருநாள் ஒதுக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாள் விழாவில்தான் தலித் கலந்துகொண்டு கொண்டாட முடியும் என்பதும் வேதனை தான்.

அனைத்து சர்ச்சிகளிலும் உயர் ஜாதி கிறிஸ்தவர்களின் சவ வண்டியில் ஒரு தலித் கிறிஸ்தவரின் சடலத்தை அனுமதிப்பதில்லை. எல்லா சர்ச்சுகளிலும் தலித்துகளுக்கு தனி சவ வண்டியைத்தான் வைத்து உள்ளனர். தலித்துகளை புதைப்பதற்குகூட தனி இடம்தான் ஒதுக்கி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் போன்ற பல மாவட்டங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தனியாக “இரட்சன்ய சேனை” என்ற சர்ச்சுகள் நடத்தப்படுகின்றன. இந்த சர்ச்சுகளில் மற்ற உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் நுழைவதே இல்லை. அந்த சர்ச்களை ஒதுக்கியே வைத்துள்ளனர். அதுபோல அங்குள்ள கத்தோலிக்க சர்ச்சுகள், சிஎஸ்ஐ சர்ச்சுகளில் தலித்துகளுக்கு இடமில்லை.

இப்படி மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள், அனுபவித்து வரும் தீண்டாமை கொடுமைகளுக்கு அளவே இல்லை. இதைத்தான், கிறிஸ்தவராக இருந்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் இன்றளவும் அனுபவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தான் ஒரு கிறிஸ்தவராக இருந்ததை ஒன் இந்தியா தமிழ் நேர்காணலில் ரஞ்சித் கூறியுள்ளார்.

“என் அப்பா தன் இளமைக்காலத்தில் கிறிஸ்தவராக மாறிவிட்டார். என் சித்தப்பாவும் கிறிஸ்தவர்தான். நானும் ஒரு தீவிர கிறிஸ்தவன்தான்” என்று பெருமையாக கூறியுள்ளார் ரஞ்சித். ஆனால், அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்காக மட்டும் இந்து என்று ஜாதி சான்றிதழ் வைத்துள்ளதாக தெரிகிறது.

இதுவும் அவரின் ஒப்புதல் வாக்கு மூலம்தான்.“என் சான்றிதழ்படி நான் இந்து ஆதிதிராவிடர்” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

கிறிஸ்தவரான பா.ரஞ்சித், “இந்து ஆதி திராவிடர்” என்று அரசாங்கத்தை ஏமாற்றி சாதி சான்றிதழ் வாங்கியது மிகப்பெரிய குற்றம். உண்மையான ஒரு இந்து ஆதி திராவிரின் கல்வி, வேலை வாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு உரிமையை முறைகேடாக தட்டிப் பறிக்கின்ற அயோக்கி செயல். இவரைப் போன்றவர்களால்தான், ஏழை இந்து ஆதிதிராவிடர்கள் இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு முறையான விசாரணை நடத்தி ரஞ்ஜித் போன்ற கிறிஸ்தவராக உள்ளவர்களின் “இந்து ஆதிதிராவிடர்” என்ற சாதி சான்றிதழ்களை ரத்து செய்வதோடு, கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஏழை இந்து ஆதிதிராவிடர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தான் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக ரஞ்சித் ஏன் இதுவரை குரல் கொடுக்கவில்லை? ஏன் போராடவில்லை? என்ற நியாயமான கேள்வியை நடுநிலையாளர்கள் எழுப்புகின்றனர். 

கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் புறக்கணிக்கின்றனர். அதற்காக ஏன் ரஞ்சத் போராட முன்வரவில்லை? என்ற கேள்வியையும் தலித்துக்கள் எழுப்புகின்றனர்.

கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதை உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் அனுபவித்து வருகின்றனர். அந்த சொத்துக்களை ஏழை கிறிஸ்தவ தலித்துகளுக்கு வழங்க ரஞ்சித் எப்போது போராடுவார் என்ற கேள்வியை கிறிஸ்தவ தலித் கேட்கின்றனர். அதைவிடுத்து இந்துக்களின் சொத்துக்களை எங்களுக்குத் தாருங்கள் என்று முட்டாள்தனமாக கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் அறிவுரை சொல்கின்றனர். 

ரஞ்சத் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்தில் முக்கியமான 10 கட்டளைகள் உள்ளன. இது ரஞ்சித்துக்கு தெரியாமல் இருக்காது. அதில் 10 – வது கட்டளை “பிறர் உடைமையை விரும்பாதே” என்பதே.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close