செய்திகள்

எங்களின் தாய் மொழி உருது! எங்களுக்கு வேண்டாம் தமிழ்! தமிழக முஸ்லீம்களின் ஆபத்தான குரல்!!

பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்றை பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் ஆண்டுதோறம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து முஸ்லிம் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு பின்னர் 10 – ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத முஸ்லிம் மாணவர்களுக்கு விலக்கு அளித்து 2016 – ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விருப்பமுள்ளவர்கள் தமிழிலும், மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200 – க்கும் அதிகமான மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள், “எங்களின் தாய்மொழியான உருது மொழியில்தான் தேர்வு எழுதுவோம். தமிழ் மொழியில் தேர்வு எழுத மாட்டோம்.” என்று கோஷம் போட்டனர்.

இந்த போராட்டம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தமிழை வைத்து பிழைப்பு நடத்திவரும் அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் இதுவரை வாய் திறக்கவே இல்லை. ஒப்புக்குகூட ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை. 

தமிழ் நாட்டில் தமிழ் வேண்டாம் என்று முஸ்லீம்கள் போராட்டம் நடத்துகிறார்கள், அதை பார்த்து தமிழர்கள் மௌனமாக இருக்கிறோம் என்றால்… “தமிழ் இனி மெல்ல சாகும்” என்றுதானே அர்த்தம்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close