அரசியல்செய்திகள்

வெற்றிக்கனியை தட்டிப்பறித்த அமீத்ஷாவுக்கு எட்டுக் குழுக்களிலும் பொறுப்பு ! பாஜக தொண்டர்கள் உவப்பு!!

நாட்டின் பல்வேறு துறைகளையும் வளர்ச்சிப்  பாதை யில் கொண்டு செல்ல ஏதுவாக 8 மத்திய அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம்பெற்றுள்ளது பாஜகவினருக்கு குறிப்பாக பாஜகவின் இளைய தலைமுறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதன்மூலம் மத்திய அமைச்சர வையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் அமித்ஷா.  பிரதமர் மோடி 6 குழுக்களிலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களிலும் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் ராஜ்நாத்சிங் பொருளா தார விவகாரங்கள் மற்றும் பாது காப்பு தொடர்பான குழுக்களில் முக்கிய இடம்பெற்றுள்ளார். 

மிக முக்கிய குழு என்று கருதப் படும் அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டியில் கூட அமித்ஷாவுக்கு முக்கிய பங்குள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அமைச்சரவைக் குழுக்களின் கூட்டம் நடைபெறும் போது சிறப்பு அழைப்பாளராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்துறை அமைச்சராக மட்டு மல்லாமல், 8 அமைச்சரவைக் குழுக் களிலும் இடம்பெற்றதன் மூலம் பார திய ஜனதாவிலும் மத்திய அரசிலும் மோடிக்கு அடுத்தபடியாக அமித்ஷா இடம் பெறுவது கட்சியின் எதிர்காலத்தை குழப்பமில்லாமலும் அதே நேரத்தில் உள் நாட்டு, வெளி நாட்டு சவால்களை சமாளித்து ஒளிமயமான இந்தியாவைக் உருவாக்க உதவும் என பாஜகவினர் நம்புகின்றனர்.  

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close