அரசியல்செய்திகள்

கர்நாடகாவில் வெளிப்படையாக வலை வீசும் எடியூரப்பா !! வலையில் விழ விரும்பும் அதிருப்தி மீன்கள் குறித்து அதிரடி தகவல்கள் !!

பெங்களூரு அரண்மனை மைதானத்தில், கர்நாடக பா.ஜ.க புதிய எம்.பி.,க்கள் பாராட்டு விழாவில் எடியூரப்பா பேசுகையில், “மாநிலத்தில் கூட்டணி அரசு இறந்துவிட்டது. ஏழு நட்சத்திர ஓட்டலில், குமாரசாமி தங்கியுள்ளதால், விதான் சவுதாவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது . எந்த நேரத்திலும் கூட்டணி ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது எனவே அதிருப்தி எம் எல் ஏ க்கள் பாஜகவில் இணைந்தால் நாட்டுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது, கர்நாடக மக்களின் விருப்பமும் அதுதான், எனவே புதிய அரசு அமைக்க வாருங்கள் என வெளிப்படையாக அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக தேசிய செயலர் முரளிதர்ராவின் முன்னால் எடியூரப்பா விடுத்த இந்த வெளிப்படையான அழைப்பால் ம.ஜ.த., – காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில்  குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இடையே கடுமையான மோதல்கள் கடுமையாக முற்றியுள்ளன. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து காங்கிரஸ் இவர்களை சுத்தமாக மதிப்பதில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக கூறி, மாநில ம.ஜ.த., தலைவர் பதவியை எச்.விஸ்வநாத் திடீரென இராஜினாமா செய்தார். இது கூட்டணி குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. விஸ்வநாத்துக்கு எம் எல் ஏ க்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே எடியூரப்பாவின் அழைப்பை ஏற்க அவர் தயார் ஆவார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ்ஜாதவ் தனது எம்எல்ஏ பதவியை இராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். இப்போது அவர் பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அதே போல உங்கள் எதிர்காலமும் ஒளிமயமாக மாறும் என எடியூரப்பா வெளிப்படையாக கூறி வருவதால் விஸ்வநாத் மூலம் போதுமான அதிருப்தி மீன்கள் வந்து விழலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் குமாரசாமி தனது எம்எல்ஏக்களுடன் 7 நட்ச்சத்திர ஓட்டல் ஒன்றில் எப்போதும் கிடப்பதாகவும், இதனால் நிர்வாகம் அங்கு ஸ்தம்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் குமாரசாமிக்கு பாஜகவுடன் உடன்பாடு வைத்துக் கொண்டு முதல்வராக தொடர விருப்பம் என்றும், ஆனால் 2010 ஆம் ஆண்டு அவர் பாஜக முதுகில் குத்திவிட்டு ஓடியதால் எடியூரப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close