2019 தேர்தல்இந்தியாசெய்திகள்

இளைஞர்கள் படித்தவர்களால் ஆளப்போகும் பாராளுமன்றம் – அதிக இளம் வயது மற்றும் பட்டதாரி எம்.பி.க்களை கொண்ட கட்சி பா.ஜ.க!!

தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 8.2 கோடி பேர் முதல் முறையாக ஓட்டளித்தவர்கள். அதிக அளவிலான இளைஞர்கள் ஓட்டளித்த தேர்தல் இதுவாகும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.,க்களில் 221 பேர் 41 முதல் 55 வயது வரையிலானவர்கள். தற்போதுள்ள லோக்சபா எம்.பி.,க்களில் மிகவும் வயது குறைந்தவர் ஒடிசாவின் கியோன்ஜர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பா.ஜ., வேட்பாளர் சந்தராணி முர்மு . 25 வயதாகும் இவர் 2017 ல் பி.டெக்., பட்டம் முடித்தவர்.

தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் 64 பேர் 25 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள், 221 பேர் 41 முதல் 55 வயதிற்கு உட்பட்டவர்கள், 227 பேர் 56 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள், 30 பேர் 70 வயதிற்கும் அதிகமான வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் அதிக இளைஞர்களை எம்.பி.,யாக கொண்ட கட்சியாக பா.ஜ.க வும், அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளன.
கல்வி தகுதியைபொறுத்தவரை 30 சதவீதம் பேர் பட்டபடிப்பு முடித்தவர்கள். 17 சதவீதம் பேர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள். 2 சதவீதம் பேர் டாக்டர்கள். பட்டதாரி எம்.பி.,க்களை அதிகம் கொண்ட கட்சியாகவும் பா.ஜ.,வே உள்ளது.

இளைஞர்களை அதிகம் கொண்டதாக 17 வது பாராளுமன்றம் அமைந்துள்ளது. அதாவது தற்போது அமைந்துள்ள லோக்சபாவில் 64 எம்.பி.,க்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close