இந்தியாசெய்திகள்

சிக்கும் மம்தா பானர்ஜி ? சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் கமிஷனருக்கு சிபிஐ. சம்மன்!!

30 ஆயிரம் கோடி சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜிவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜிவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இவ் வழக்கில் ஏற்கனவே சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மேல் வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. சிபிஐ விசாரணையை மம்தா பானர்ஜி ஏன் எதிர்த்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிஐ

இந்நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜிவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டில் தனக்கு முன்ஜாமின் கோரி ராஜிவ்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதன் பின்னர், சி.பி.ஐ., சார்பில் ராஜிவ்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சி.பி.ஐ., அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளது.இந்த நிதி நிறுவன மோசடி வழக்கில் பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பாக்கப்டுகிறது.

இந்நிலையில், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் நாளை(மே 27) விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ.,சம்மன் அனுப்பி உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close