இந்தியாசெய்திகள்

உதவியாளரின் பூத உடலை தோளில் சுமந்து சென்ற ஸ்மிருதி இராணி! கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

அமேதி தொகுதியை சேர்ந்த சுரேந்தர் சிங், ஸ்மிருதி இரானிக்காக பிரசாரம் செய்து வந்தவர். பர்லியா கிராமத்தில் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றியை கொண்டாடிய அவரை மர்ம நபர்கள் சிலர் நேற்று (மே 25) நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங், லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி, அமேதி சென்றார். அங்கு சுரேந்தரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

சுரேந்தரின் கொலைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனவும், பா.ஜ.க-வின் வெற்றியை கொண்டாடியதாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சுரேந்தரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close