செய்திகள்

2022ஆம் ஆண்டில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாகும் : பலே பலே திட்டங்களுடன் பிரதமர் மோடி தயார்

மோடி, பாரத பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றவுடன், நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்துவதற்காக, திட்டங்களுடன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 100 நாட்கள் என்னென்ன துறைகளில், கவனம் செலுத்தி, வளர்ச்சியை எப்படி, பிரதமர் மோடி வேகப்படுத்தப்போகிறார் என்று பாலிமர் செய்தி குறிப்பு கூறுகிறது.

பிரதமர் மோடிக்கு, வரவிருக்கிற, 5 ஆண்டும் சவாலாக இருக்கும் எனக் கூறப்பட்டாலும், அதை சமாளிக்கும் கச்சிதமான திட்டங்களோடு, அவர் காத்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதும், மளமளவென, அடுத்த 100 நாட்களில், என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், எந்தெந்த துறைகளில், கவனம் செலுத்த வேண்டும் என மோடி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மீண்டும் பிரதமராக பதவியேற்றதும் நரேந்திர மோடி, முதலில், நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018-19 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 6.6 விழுக்காடாக இருந்த நாட்டின் பொருளாதாரத்தை, இரட்டை இலக்கை பொருளாதார நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு, 2022ஆம் ஆண்டில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இரட்டிப்பாக்குவதோடு, 2025ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரத்தை, 3 கோடியே 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடங்குவார்.

மீண்டும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி, ஜி.எஸ்.டி வரி நடைமுறையை, மேலும் எளிமைப்படுத்த உறுதியான முடிவோடு இருக்கிறார். அந்த வகையில், ஜி.எஸ்.டி வரியை, இரண்டே இரண்டு பிரிவுகளாக சுருக்கி, அதிகப்பட்ச வரியை ஒற்றை இலக்கத்தில் கொண்டு வருவதற்கான திட்டத்தை, நரேந்திர மோடி முன்னெடுப்பார் எனத் தெரிகிறது.

மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், உற்பத்தி துறைகளில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு, சிறு-குறு நிறுவனங்களான முதலீட்டு கடன்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, அதிகப்படியான தேவையாக இருக்கும் வேலைவாய்ப்பை ஏராளமான அளவில் உருவாக்கி, வேலைவாய்ப்பின்மையை விரட்டியடிக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

50 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டத்தை, கடந்த 2017ஆம் ஆண்டு திட்டமிட்டபடி, மாற்றி, நடைமுறைப்படுத்துவதும், முதல் 100 நாட்களில், நரேந்திர மோடி முன் நிற்கும், முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இது தவிர, பள்ளி, கல்லூரி மாணவர் நலனும், அவர்களுக்கான பாடத்திட்டம், திறன்மிக்க ஆசிரியர், பேராசிரியர்களை கொண்டு, 5 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்களை நிரப்புவதும், ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டவாறு, புதிய தேசிய கல்வி கொள்கையை வெளியிடுவதற்கும், நரேந்திர மோடி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மிகக் குறைந்த செலவில், நிறைந்த மருத்துவம் என்ற முழக்கத்தோடு, கடந்த 5 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த பிரதமர் நரேந்திர மோடி, நோயாளிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, மேலும் மிக குறைந்த விலையில், மருந்து மாத்திரைகளோடு, மிக குறைந்த விலையில், ரத்த பரிசோதனை செய்வதற்கான திட்டத்தையும் முன்னெடுப்பார் எனக் கூறப்படுகிறது. நாடு முழுவதும், 5 ஆயிரம் குறைந்த விலை மருந்தகங்களில், நோயியல் கண்டறியும் சோதனை கூடத்தை அமைக்கவும், திட்டமிட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரை, இந்தியாவுக்கு சாதகமாக பயன்படுத்தி, சீனாவில் உள்ள ஏற்றுமதி உற்பத்தியாளர்களை ஈர்த்து, நம் நாட்டில், அவர்களை தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம், உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க மோடி திட்டமிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

2022ஆம் ஆண்டிற்குள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 கோடி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தொழிலாளர் நலக் காப்பீட்டு திட்டத்தை முன்னெடுப்பதும், மோடியின் முக்கிய பரிசீலனையில் உள்ளது.

உலகளவில், மென்பொருள் ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் இந்தியாவை, மேலும், புதிய உச்சத்திற்கு நகர்த்தும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட, மென்பொருள் தயாரிப்புகளுக்கான தேசிய கொள்கை-2019ற்கு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அளிப்பதும், முதல் 100 நாளில், நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close