அரசியல்செய்திகள்

வெற்றிக்கு ஆற்றல் வாய்ந்த தலைமையே காரணம் – மோடி!

நிர்வாகத் திறமை மிக்க தலைமையே வெற்றிக்கு வழிகாட்டும் திறவுகோல் என்று பிரதமர் மோடி அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

பிரதமர் அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் இன்று(மே 25) பிரதமர் மோடி பேசுகையில், “நேரம், தன்னலம் பார்க்காமல், எதிர்பார்ப்புகளின்றி அலுவலக ஊழியர்கள் அனைவரும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளீர்கள். அவரவர் கடமையை சிறப்பாக நிறைவேற்றினீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி, நான் பல அடுக்கு கூட்டுத் தலைமை என்பதற்கே முக்கியத்துவம் அளித்து வந்துள்ளேன்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு ஆற்றல் வாய்ந்த தலைமையே காரணம். இந்த சரித்திரப்பூர்வமான வெற்றியை கூட்டுழைப்பால் சாதித்தோம்” என்று பேசினார். முன்னதாக, பிரதமர் அலுவலக ஊழியர்கள், பிரதமருக்கு மிகச்சிறப்பான வரவேற்பளித்தனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close