ராமபிரானயும் சீதா பிராட்டியையும் கிண்டலடித்த விளம்பரத்தை கடுமையாக கண்டித்துள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் திரு H. ராஜா. இது குறித்து அவர் பதிவிட்டுள்ள கீச்சில், “சன்லேண்ட் எண்ணெய் விளம்பரத்தில் இந்திரனையும் நாரதரையும் வைத்து நக்கல் செய்து விளம்பரம் செய்தனர். தற்போது எம்பெருமான் ராமனையும் சீதா பிராட்டியாரையும் விளம்பரத்திற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்ன நடவடிக்கை எடுக்கலாம்?”, என்று கூறியுள்ளார்.

இந்து தெய்வங்களை கொச்சை படுத்தி இந்துக்களின் மனதை புண்படுத்துவது என்பது, அரசியல் தாண்டி ஊடக துறை, சினிமா துறை, விளம்பர துறை என அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது சன்லேண்ட் எண்ணெய் நிறுவனமும் ராம பிரானை வைத்து விளம்பரம் எடுத்துள்ளது இந்துக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share