2017-18 ஆம் நிதியாண்டிற்கு அரசிதழ் பதிவுபெறாத தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்.பி.எஃப். / ஆர்.பி.எஸ்.எஃப் ஊழியர்கள் நீங்கலாக) 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ₹2044.31 கோடி நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போனஸ்  பெறுவதற்கான ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு ₹7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹17,951 கிடைக்கும்.  இந்த முடிவால் அரசிதழ் பதிவு பெறாத சுமார் 11.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சரவை முடிவின்படி ஒவ்வொரு ஆண்டும் தசரா / ஆயுத பூஜை விடுமுறை நாட்களுக்கு முன்னதாக, போனஸ் வழங்கப்படுவதுபோல், இந்த ஆண்டும் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும். 2017-18க்கு 78 நாட்களுக்கு இணையாக உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்கப்படுவது ரயில்வேயின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Based on Inputs from Press Information Bureau

Share