செய்திகள்

‘தல’ தல தாண்டா? ‘தல’ அஜித்தை புகழ்ந்து தள்ளிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்!

பிரபல திரைப்பட நடிகர் தல அஜித் குமார் அவர்களின் ஆலோசனையுடன் மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றது. இந்த விமானத்தை தயாரிக்க மாணவர்களுக்கு பலவகையில் உதவியதாக நடிகர் அஜித்துக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா.

இதையடுத்து பன்முகத்தன்மை கொண்ட நடிகர் அஜித்குமார் அவர்களின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/MrUthaman/status/1050027311377129473?s=20

நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக்ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது.

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பி நகரில் கடந்த 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடத்தப்பட்டது. உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில் நடிகர் ‘தல’ அஜீத் குமாரை தொழில் நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை வந்தடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட போட்டியில், அதில் ‘தல’ அஜீத் மாணவர் குழுவின் தக்ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் குழுவின் விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

இதில் விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் குழு விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது.

நேர்முக தேர்வு மற்றும் ஆய்வறிக்கை ஆகியவற்றிலும் தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் தக்ஷா விமானம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

‘தல’ தல தாண்டா?

Tags
Show More
Back to top button
Close
Close