திராவிட இயக்கம் தன்னை பல வகையில் அடையாளப்படுத்தி வந்துள்ளது. “பகுத்தறிவுக்கான பாசறை” “சமூக நீதி”, “பிற்பட்டோருக்கான இயக்கம்”, “பெண் விடுதலை” என, பலவாறு அடையாளப்படுத்தியது. இந்த அடையாளங்களை வெறும் முழக்கங்களாக மட்டுமே இருந்து வந்துள்ளதால், வெகுஜன மக்களை தனது செல்வாக்கு தளத்தில் கொண்டு செல்ல முயலாமல், இன்று தான் முன்னிறுத்திய எந்த அடையாளத்திலும் காலூன்ற இயலாத நிலையில் தோல்வியுற்று அழிவின் விளிம்பில் உள்ளது. இதன் மூலம், திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமே நெருக்கடியில் உள்ளது எனும் மதிப்பீடு முன்வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களில் நேர்ந்த பாலியல் தொல்லைகளை #MeToo என்ற ட்விட்டர் Hashtag மூலம் பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இந்தியாவில் கலை மற்றும் ஊடகத்துறையில் உள்ளவர்கள் தங்கள் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வந்த நிலையில் வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் மொத்த #MeToo இயக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பெண் இனத்தை இழிவாக சித்தரித்து சர்ச்சைக்குரிய திராவிட இயக்க தலைவர் சுப வீரப்பாண்டியன் பதிவிட்டுள்ளார். இவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.

அவரது பதிவில் “இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்” “தப்பு நடந்து 14 வருஷம்  ஆயிடுச்சா?”#MeToo என்று உள்ளது.

பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தி மூன்றாம் தரமாக இந்தப் பதிவை செய்துள்ள சுப வீரபாண்டியனை நெட்டிசன்கள் சரமாரியாக தாக்கி வருகின்றனர்.

திராவிடர் கழக இயக்கத்தின் பெண் உரிமை என்பது பெண்களை மோகப்பொருளாக சித்தரிப்பதும், கொச்சைப்படுத்துவதும் தான் போல.

Share