செய்திகள்

வைரமுத்து ஒரு “பொய்யர்” : காமப்பேரரசு வைரமுத்துவை துணிச்சலாக எதிர்க்கும் பாடகி சின்மயி

வைரமுத்து மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை புகார்களை அடுத்து 3 நாட்களுக்கு பிறகு, வாயை திறந்துள்ளார் வைரமுத்து. அவர் சற்று நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.”, என்று கூறியுள்ளார்.

இதை மேற்கோள் காட்டி பாடகி சின்மயி “பொய்யர்” என்று பதிவிட்டுள்ளார். தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பாடகி சின்மயி, “எனக்கு இனி பாட வாய்ப்பு கிடைக்காமல் கூட போகும். அரசியல் ரீதியான அழுத்தங்கள் கூட எனக்கு வரலாம். ஆனால் இது பேசப்பட வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது”, என்று மிகவும் துணிச்சலுடன் பேசினார்.

இதை தொடர்ந்து பலரும் தங்களது ஆதரவை பாடகி சின்மயிக்கு அளித்து வருகின்றனர். அவரின் இந்த துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தேசிய ஆங்கில ஊடகங்கள் இந்த விவகாரத்தை பற்றி பேச ஆரம்பித்த பிறகு தான், தமிழக ஊடகங்கள் இதை செய்தியாகியுள்ளனர். இதையும் போட்டு உடைத்துள்ளார் பாடகி சின்மயி.

Tags
Show More
Back to top button
Close
Close