இந்தியா

20 வருடமானால் என்ன? கடைக்கோடி தொண்டனையும் தன்னில் ஒருவராக கருதும் பிரதமர் மோடி – நெகிழ்ச்சி சம்பவம்!

20 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் பணியாற்றிய பா.ஜ.க கட்சி தொண்டனை தற்போது சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தின் சம்பாலா கிராமத்தில், விவசாய சங்கத் தலைவர் சோட்டு ராமின் நினைவாக அமைக்கப்பட்ட 64 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த சோட்டு ராமின் வாழ்க்கை வரலாற்று கண்காட்சியை அவர் பார்வையிட்டார். ஹரியானா மாநிலத்தில் சோனாபட்டில் ரயில் பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நேரத்தில் அரியானாவில் ரோதக் பகுதியில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் தன்னுடன் 20 வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த பா.ஜ.க தொண்டர் தீபக் குறித்து நலம் விசாரித்தார்.

அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் அவரைப்பற்றி முதலில் விசாரித்தார். “தீபக் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர். பின்னர் அவர் பா.ஜ.க தரப்பினரிடம் விசாரித்த போது, தீபக் ரோதக்கில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திலேயே பணியாற்றி வந்துள்ளது தெரிய வந்தது. இதனை அறிந்து உடனடியாக நான் அவரை காண வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் பிரதமர். பின்னர் தீபக்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. 20 வருடங்களுக்கு பிறகும் என்னை ஞயாபகம் வைத்திருப்பார் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று உருகியுள்ளார் தீபக்.

பா.ஜ.க-வில் 1998 ஆம் ஆண்டு குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அவர்கள், வெகு விரைவில், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998-ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி அவர்கள், 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாரதிய ஜனதாக் கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். அந்த நேரத்தில் ரோதக் பகுதியில் உள்ள பா.ஜ.க கட்சி  அலுவலகத்திற்கு செல்லும் போது தீபக் தான் அப்போது பிரதமர் மோடிக்கு உணவு சமைத்து கொடுத்து உதவியுள்ளார்.

Picture & Content Credits – Tribune India

Tags
Show More
Back to top button
Close
Close