வைரமுத்துவுக்கு எதிராக பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், வைரமுத்துவுக்கு மிகவும் நெருக்கமான தி.மு.க கட்சி அவரின் துணைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இணையத்தில் தி.மு.க-வினர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், அந்த பகீர் தகவல்களை வெளிப்படுத்தும் பாடகி சின்மயிக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

SKP கருணா எனும் தி.மு.க நிர்வாகியின் பதிவு தங்கள் பாலியல் கொடுமைகளை பகிர்ந்த பெண்களை இழிவுப்படுத்துவது போல உள்ளது.

பெண் சுதந்திரம் மற்றும் சுயமரியாதைக்கு களங்கம் விளைவித்த வைரமுத்துவை கண்டிக்காமல் இவர்கள் அவருக்கு முட்டு கொடுப்பது இவர்களின் போலி வேஷத்தை களைத்துள்ளது.

இது போதாதென்று திராவிட கழக தமிழர் பேரவையின் தலைவர் திரு. சுப வீரபாண்டியன் அவர்களும் வைரமுத்துவிற்கு முட்டு கொடுக்கும் வகையில், பெண்கள் மீதான இழிவான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். “”இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்”
“தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா?” #MeToo”, என்று பதிவிட்டுள்ளாார்.

இதை தொடர்ந்து பலரும் சுப வீரபாண்டியன் அவர்களின் பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காமப்பேரரசு வைரமுத்துவிற்கு தி.மு.க-விலும் திராவிட கழகங்களிலும் உள்ள செல்வாக்கை தான் இது வெளிப்படுத்துகிறது என்று பலரும் கருதுகின்றனர். முன்னதாக, காமப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடகி சின்மயியை அரசியல் ரீதியாக மிரட்டியுள்ளார் என பாடகி சின்மயி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் மனோஜ் பிரபாகர் அவர்களின் கருத்து,

ஊடகவியலாளர் சஞ்சீவி சடகோபன் அவர்களின் கருத்து,

ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரன் அவர்களின் பதிவு,

 

Share