தமிழ் நாடு

இரவில் அழைப்பு, அரசியல் ரீதியான மிரட்டல் : காமப்பேரரசு வைரமுத்துவிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவம் – துணிச்சலுடன் போட்டு உடைத்த பாடகி சின்மயி

#MeToo என்ற ஹேஷ் டேக் மூலமாக பல துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை துணிச்சலுடன் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாடகி சின்மயி அவர்கள் மிகவும் துணிச்சலாக தைரியமாக பல பெண்களின் சார்பாக திரை துறையில் ஏற்பட்ட பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார். அதில் முக்கிய பங்கு வகிப்பது, காமப்பேரரசு வைரமுத்து தான். அவர் மீதான அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை தமிழ் கதிரில் பதிவிட்டிருந்தோம். பலர் மீதான பல புகார்களை பதிவிட்ட பாடகி சின்மயி, தற்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

Year 2005/2006 maybe.
Veezhamattom. An album for Srilankan Tamizhs that I had sung in, as had Manikka Vinayagam sir.
I dont remember if it was a book or an album release or both now; the performances and launch happened in Switzerland in (Bern / Zurich maybe)

— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018

“2005 அல்லது 2006 ஆண்டாக இருக்கும். இலங்கை தமிழர்களுக்காக ஆல்பம் ஒன்றில் பாடினேன். புத்தகம் வெளியீடா அல்லது பாடல் வெளியீட்டு விழாவா அல்லது இரண்டுமேவா என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அந்த விழா சுவிஸர்லேண்ட் நாட்டில் நடந்தது.”

We sang. We went to Switzerland. We performed.

Everyone left. Only my mother and I were asked to stay back.

The organizer(I dont remember his name) asked me to visit Vairamuthu sir in a hotel in Lucerne.

— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018

“நாங்கள் ஆல்பத்தில் பாடினோம். சுவிஸர்லேண்ட் நாட்டுக்கும் சென்று, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். நிகழ்ச்சி முடிந்தது. அனைவரும் கிளம்பி விட்டனர். ஆனால், என்னையும் எனது தாயாரை மட்டும் காத்திருக்க சொன்னார்கள். பிறகு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்னிடம் வந்து, வைரமுத்து தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். ”

I asked why. He told me to cooperate. I refused. We demanded to be sent back to India. He said ‘You wont have a career!’

My mother and I both put our foot down, career vendam mannum vendam. Demanded an earlier flight to India and came back.

— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018

“எதற்காக என்று கேட்டேன். ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். முடியாது என்று மறுத்துவிட்டேன். பிறகு, நாங்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்ப படுவோம் என்றும், “இனி உனக்கு திரைத்துறையில் வேலை இருக்காது” என்றும் கூறினார். நானும் என் தாயும், வேலையும் வேண்டாம், மண்ணும் வேண்டாம் என்று கூறிவிட்டு, இந்தியாவிற்கு சீக்கிரம் வந்துவிட்டோம்.”

3, maybe 4 years ago, he had a book release function & asked me to sing Tamizh Thaai vaazhthu.
I said I would be unable to.
He in turn responded ‘I ll tell (a politician) you spoke ill of him on stage, yelled at me and kept the phone down
I bawled. My parents in law consoled me

— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018

“3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை தமிழ் தாய் வாழ்த்து பாட அழைத்தார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அதற்கு அவர், அரசியல் வாதி ஒருவரை பற்றி நான் தவறாக பேசினேன் என்று அவரிடம் கூறிவிடுவேன் என்று கூறி, திட்டிவிட்டு அழைப்பை துண்டித்தார்.”

Then had the courage to call his manager back & told him ‘I ll go and tell the same politician you re lying because I have NEVER given a political speech and HE will trust ME.
This for refusing to sing.

And you ask why victims dont name him?!

To hell with those of you who do.

— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018

“பிறகு, துணிச்சலுடன் அவரது மேலாளருக்கு அழைத்து, நீங்கள் கூறிய அதே அரசியல்வாதிக்கு அழைத்து நான் அவ்வாறு கூறவில்லை என்று உண்மையை கூறுவேன். ஏனென்றால் நான் இதுவரை அரசியல் பேசியதே கிடையாது. அவரும் என்னை நம்புவார்”, என்று பதிவிட்டுள்ளார்.”

இதனை அடுத்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிய காமப்பேரரசு வைரமுத்து தனது அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தியிருப்பாரோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close