சிறப்பு கட்டுரைகள்

கச்சா எண்ணெய் விலை பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல் : ஒரு சிறப்பு பார்வை

கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. எரிபொருளின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து மத்திய அரசு நேற்று லிட்டருக்கு ₹2.50 வரை குறைத்தது. அனைத்து மாநிலங்களும் மேலும் ₹2.50 குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் விலையை குறைத்தது. இந்த மாநிலங்களில் இருபொருளின் விலை ₹ 5 வரை குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஏன் உயர்கிறது? வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதா ?

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணையின் உற்பத்தி ஒரு பில்லியன் பீப்பாய்களை தொட்டது. சர்வதேச நிறுவனங்களின் அறிக்கையின் படி சவூதி அரேபியா  மற்றும் ரஷ்யாவை விட அமெரிக்கா அதிக கச்சா எண்ணையை தயாரிக்க கூடும். அமெரிக்காவின் ஷெல் நிறுவனங்களும் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் உற்பத்தி 2.6 மில்லியன் பீப்பாய் அளவு அதிகரிக்கும்.

பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு [OPEC]  கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைத்து, அதன் விலையை அதிகரித்துக் கொண்டே இருந்தது. கீழே இருக்கும் படம் அமெரிக்காவில் ஒரே வருடத்தில் கச்சா எண்ணெயின் உற்பத்தி ஐம்பது சதவிதம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. அங்கே எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டு கொண்டே இருக்கின்றன. இனி வரும் அடுத்த இரண்டாண்டுகளில் [2019 – 2020] விலை குறைந்து போக வாய்ப்புண்டு.

ஈரானின் கச்சா எண்ணையின் உற்பத்தி ஒரு மில்லியன் பீப்பாய் அளவு இருக்கிறது. ஈரானின் எரிபொருளையே நம்பி இருந்ததால் விலை உயர்ந்துகொண்டே சென்றது. ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் தங்கள் விலை நிர்ணயித்து கொண்டனர். தற்போது அமெரிக்கா எண்ணை உற்பத்தியை உயர்த்தியுள்ளதால், இந்த நாடுகள் அமெரிக்காவிடம் சரணடைய வேண்டிவரும். பல இடத்தில் எண்ணையை எடுப்பதால், எண்ணையின் தேவை குறைய தொடங்கும். தேவை குறைந்தால் விலையும் குறையும்.

சவுதி அரேபியாவின் ராஜகுடும்பத்தில் நான்கு வருடத்துக்கு முன்பு 15,000 பேர் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் இருந்தனர்.  அவர்களின் கருவூலம் இனி வேகமாக குறையும். இந்த நான்கு வருடங்களுக்குள் இன்னும் பலர் பிறந்திருக்கலாம்.  இனி செலவுகளை குறைக்க அந்நாடு தான் இது வரை அளித்து வந்த சலுகைகளை குறைக்கலாம். ஏமன் நாட்டில் நடக்கும் சண்டையும் இந்நாட்டின் செலவினங்களை அதிகரிக்கிறது. சர்வதேச எரிசக்தி உற்பத்தியாளர்கள் அமைப்புடனான ஒப்பந்தத்தை மீறி ஈரானால் அதிகளவில் எண்ணெய் உற்பத்தியை தொடங்கவும் முடியாது.

ஈரான் என்ன செய்யும்? அமைதியாக இருந்து அமெரிக்காவின், குறிப்பாக அதிபர் டிரம்பின் நல்லெண்ணத்தைப் பெற முயலுமா? அல்லது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முனைந்து சந்தை விலையில் அதிரடி தள்ளூபடி  [30%] தருமா? முழு தொகையையும் டாலராக கேட்காமல் ஒரு பகுதியை இந்திய ரூபாயில் பெற்றுக் கொள்ளுமா?  டிரம்ப் இந்தியா அமெரிக்காவுடன் தொடர்பு  கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால அமெரிக்கா இந்திய ரூபாயை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை தருமா? இல்லையென்றால் இந்தியா ஈரானுடனான தனது ஒப்பந்தத்தை தொடருமா?

Credits : PGurus Tamil

Tags
Show More
Back to top button
Close
Close