விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு நாடு முழுவதும் மிகவும் விமர்சியாக  கொண்டாடப்பட்டது. பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை தயாரித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். பிடிச்சு வச்சா பிள்ளையார் என்பது போல, ஒவ்வொரு வருடமும் பல விதமான விநாயகர் சிலைகளை தயாரித்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு இந்தியாவில் வழிபாடு செய்யப்பட்ட சில விநாயகர் சிலைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரிவு மக்களையும் ஈர்த்துள்ளது. சென்னையிலுள்ள கொலத்தூரில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்ட சிலை சுமார் 7,000  வாழைப் பூக்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விநாயகரை  மகிழ்ச்சியுடன் வணங்கினர்.

Banana Flower Vinayagar in Kolathur, Chennai

பஞ்சாப்பில் லூதியானாவைச் சேர்ந்த உணவகம் ஒன்றில்,  ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா என்பவர் சாக்லேட்டை வைத்து ஒரு கணபதி சிலை தயாரித்துள்ளார். அவர் கூறியதாவது: ’65 கிலோ விநாயகர் சிற்பத்தை உருவாக்க 10 நாட்கள் ஆனது. 20 சமையல்காரர்கள் இந்த தயாரிப்பில் ஈடுபட்டனர் . பிறகு, இந்த சிலையை பாலில் கறைத்து, ‘சாக்லேட் பாலை ‘ஏழை குழந்தைகளுக்கு’ பிரசாதமாக விநியோகிப்போம்’, என்று கூறினார்.

Chocolate Ganesha prepared for 2018 Ganesha Chathurthi

தமிழகத்தில் இந்த ஆண்டு கரும்பு விநாயகர் வைக்கப்பட்டிருந்தது. 2 டன் கரும்பு கொண்ட கணபதி சிலை 20 நபர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த சிலையை தயாரிக்க 4 நாட்கள் எடுத்துக் கொண்டது.

Vinayagar made of Sugarcane in Tamilnadu

வீட்டு உபகரணங்கள் மூலம் செய்யப்பட்ட மிகவும் ஆக்கப்பூர்வமான விநாயகர் சிலை ஒன்று கடை ஒன்றில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

Lord Ganesha designed with home appliances
Share