உலக உயிரி எரிபொருள் நாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, உயிரி எரிபொருள் பயன்படுத்துவதன் மூலம் ₹12,000 கோடி அளவுக்கு எரிவாயு இறக்குமதி குறைக்கப்படும் என்று கூறியிருந்தார். தற்போது அது தொடர்பான சில முக்கிய அம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

 

உயிரி எரிபொருள் 2018க்கான தேசிய கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. இந்தக் கொள்கை உயிரி எரிபொருளை அடிப்படை உயிரி எரிபொருளாக பயோ எத்தனால் மற்றும் பயோ டீசலை முதல் தலைமுறை எனவும், எத்தனால், எரிபொருளாக மாற்றப்படும் நகராட்சிக் கழிவு மேலாண்மை ஆகியவற்றை இரண்டாம் தலைமுறை எனவும், உயிரி எரிபொருள் மற்றும் சி.என்.ஜி.யை மூன்றாம் தலைமுறை உயிரி எரிபொருளாகவும் வகைப்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு வகைக்கும் உரிய நிதி ஊக்கத்தை அளிப்பது சாத்தியமாகும்.

2. கரும்புச் சாறு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இனிப்புச் சோளம் போன்ற சர்க்கரை நிறைந்த பொருட்கள், மாவுச் சத்து நிறைந்த சோளம், மரவள்ளி போன்ற பொருட்கள், மனித நுகர்வுக்கு ஏற்காத கோதுமை, அரிசி குருணை போன்ற பாதிக்கப்பட்ட உணவு தானியங்கள், அழுகிய உருளைக் கிழங்கு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்க இந்தக் கொள்கை வகை செய்கிறது.

3. உற்பத்தி கூடும் சமயங்களில் தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலைப் பெற்று பெட்ரோலில் கலப்பதற்கு கூடுதலாக உள்ள உணவு தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிக்க இந்தக் கொள்கை அனுமதிக்கிறது.

4. மேம்படுத்தப்பட்ட உயிரி எரிபொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இரண்டாம் தலைமுறை எத்தனால் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஆறு ஆண்டுகளில் ₹ 5000 கோடி ஊக்கத்தொகையை கூடுதல் வரி ஊக்கத்தொகைக்கு கூடுதலாக அளித்து முதல் தலைமுறை உயிரி எரிபொருளை விட கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படும் என இந்தக் கொள்கை குறிக்கிறது.

5. சமையலுக்குப் பயன்படுத்தாத எண்ணெய் வித்துக்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், குறுகிய கால பயிர்களில் இருந்து உயிரி எரிபொருள் தயாரிப்புக்கான விநியோகச் சங்கிலி நுணுக்கங்களை அமைக்க இந்தக் கொள்கை ஊக்கமளிக்கிறது.

6. முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தக் கொள்கை ஆவணத்தில் உயிரி எரிபொருள் தொடர்பான அமைச்சகங்கள்/துறைகளின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.

Share