Image from Business Standard dated May 30, 2018

மத்திய மோடி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக முத்ரா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் சிறு தொழில் செய்யும் நபர்களுக்கு பிணையம் இல்லாமல் எளிதில் கடன் உதவி பெற்று பயனடையும் வகையில் முத்ரா திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது, மோடி அரசு.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிசு திட்டம், கிஷோர் திட்டம், தருண் திட்டம் என மூன்று விதமாக பிணையம் ஏதுமின்றி கடன் உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • சிசு திட்டத்தின் கீழ் ₹50,000 வரையிலும்.
  • கிஷோர் திட்டத்தின்கீழ் ₹50,000-க்கு மேல் ₹5 லட்சம் வரையிலும்.
  • தருண் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்துக்கு மேல் ₹10 லட்சம் வரையிலும்

ஏழை எளிய மக்களுக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள். கல்வித்தகுதி கட்டாயமில்லை. சிறு தொழில் செய்து வரும் நபர்கள் தொழிலை விரிவுப்படுத்துவதற்காகவும், புதிதாக சிறு தொழில் தொடங்க விரும்பும் நபர்களும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்று பயனடையலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய அரசு அலுவலகங்களிலும், அனைத்து வங்கிகளிலும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, நிரந்தர வங்கி எண் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றை தாங்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ள வங்கிகளிலோ அல்லது தங்கள் அருகில் உள்ள வங்கிகளிலோ சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம். பயனாளிகள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு அந்தந்த வங்கி கிளைகளில் அதற்கான ஒப்புகை ரசீதும் வழங்கப்படும்.

ஏழை, எளியோருக்கு பிணையம் ஏதுமின்றி கடன் உதவி வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இத் திட்டத்தினை வங்கியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில், முத்ரா கடன் பெறுவதில், தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் பெண்களால் மட்டுமே பெறப்பட்ட முத்ரா கடன் கணக்குகளின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒரு கோடி இருபத்தைந்து லட்சத்து எழுபதாயிரத்து அறநூற்று தொன்னூற்று நான்கு (1,25,70,694) முத்ரா கணக்குகள் தமிழக பெண்களால் மட்டுமே துவங்கபட்டுள்ளது. 2015 – 2016 ஆம் ஆண்டு 41,48,794 கணக்குகளும், 2016 – 2017 ஆம் ஆண்டு 37,38,516 கணக்குகளும், 2017 – 2018 ஆம் ஆண்டு 38,04,042 கணக்குகளும், 2018 ஆன் ஆண்டு, ஜூலை 20 வரையில் 8,79,342 கணக்குகளும், மொத்தமாக 1,25,70,694 கணக்குகளும் துவங்கபட்டுள்ளது.

As per data reported by MLIs on MUDRA portal

ஒருவரே ஒரு முறைக்கு மேல் முத்ரா கடன் பெரும் வசதி செய்யப்பட்டுள்ளதால், இந்த கணக்குகளின் படி தமிழகத்தில் மட்டும் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன் பெற்றிருப்பார்கள் என்று தெரிகிறது.

Share