உத்தர பிரதேச மாநிலம் டியோரியா பகுதியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலயில் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து காப்பகத்தில் இருந்த 24 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டனர். காப்பாகத்தை நடத்தி வந்த கிரிஜா திரிபாதி மற்றும் அவருடைய கணவர் மோகன் திரிபாதி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காப்பகத்தில் உள்ள 10 வயது சிறுமி, தப்பித்து வந்து, காவல் துறையிடம் கொடுத்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த சிறுமிகள் அடிமைகளை போல் நடத்தப்பட்டதாகவும், காப்பாகத்திற்கு கார் ஒன்று வந்து 15 சிறுமிகளை கொண்டு சென்றதாகவும், மறு நாள் அந்த சிறுமிகள் அழுது கொண்டே திரும்பியதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர், Dr.R.G. ஆனந்த் தலைமையில், சிறப்பு விசாரணை குழு, உத்திரபிரதேச மாநிலம் டியோரியாவில் இன்று அதிரடி ஆய்வு நடத்தியது. இது குறித்து Dr.R.G. ஆனந்த் அவர்கள் தமிழ் கதிரிடம் கூறுகையில், “மத்திய அமைச்சர் திருமதி. மேனகா காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி, உத்தர பிரதேச மாநிலம் டியோரியா பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து சிறப்பு விசாரணை குழு நேரடி ஆய்வு மேற்கொண்டது. நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில், மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்.பி ஆகியோருடன் இனைந்து இந்த ஆய்வை நடத்தினோம். சில நம்பகமான தகவல்கள் உள்ள இந்த ஆய்வின் அறிக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் சமர்ப்பிக்கப்படும். பிறகு, இந்த அறிக்கையின் தகவல்களின் படி மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

Kathir Archives – Dr. R.G Anand addressing media

காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் மிகவும் பாதுகாப்பாக நலமுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு அணைத்து விதமான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மேலும் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு இன்று 7 மணி நேரத்திற்கும் மேலாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது,” என்று கூறினார்.

இன்று ஆய்வு மேற்கொண்ட இதே குழு நாளை பீகார் மாநிலத்தில் முசாபர் நகர் சென்று அங்கு நடந்த இதே போல் ஒரு சம்பவம் குறித்தும் ஆய்வு செய்யும் என்று மேலும் தெரிவித்தார்.

Share