Sources : PTI 

குஜராத் மாநிலம், தாஹோத் மாவட்டத்தில் உள்ள சஞ்சேலி கிராமத்தில் இஸ்லாமிய பெண்ணை காதலித்து, காதலித்த பெண்ணுடன் தப்பி ஓடியதால், 200 பேர் கொண்ட ஒரு கும்பல் காதலனின் வீட்டிற்குள் புகுந்து, காதலனின் வீட்டை சூரையாடியுள்ளனர். 200 பேர் கொண்ட இஸ்லாமிய கும்பலுக்கு எதிராக,  அந்த காதலனின் தந்தை பிரகாஷ் பூய் புகார் அளித்துள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் பூய் என்பவர் புகார் அளித்தபின், ரஜாக் பாண்டி, இர்ஷாத் பாண்டி, சலேஹா பாண்டி மற்றும் ரஷீடா பாண்டி ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 45,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தாஹோத் மாவட்டத்தில், சுமார் 20 பேர் ஒரு கும்பல் குழந்தை திருட்டு சந்தேகத்தின் பேரில், 22 வயது இளைஞரை அடித்து கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share