ஹரியானா மாநிலத்திலுள்ள சுராஜ்குண்டில், ஜூன் 14 – 18 தேதிகளில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் பங்கு பெற்ற கூட்டம் ஒன்று நடந்தது.  கூட்டத்தில், பா.ஜ.க. பாராளமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை ஆய்வு செய்யவும், அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சங்கத்தான் மந்திரிகளுக்கு(பொறுப்பாளர்கள்) அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு தேர்தலில், தற்போது இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பா.ஜ.க-வில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை இந்த அறிக்கைகள் தீர்மானிக்கும்.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் எவ்வாறு இருக்கிறது, மக்களிடையே இன்னமும் பிரபலமாக உள்ளனரா, பா.ஜ.க. கட்சியினரை இணக்கமாக வைத்துக் கொண்டுள்ளனரா என்பதை பற்றியெல்லாம் இந்த உத்திர பிரதேச பொறுப்பாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். இதனை பொறுத்தே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது நிர்ணயிக்கப்படும் .

“தற்போது எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிடப் போகிறார்கள் என்பது இந்த அறிக்கையின் அடிப்படையில் இருக்கும். தொகுதியில் ஒரு எம்.பி-யாக உங்கள் கடமைகளை சரி வர செய்து இருந்தால், கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வாறாயினும், பொது மக்கள் ஆதரவு இல்லை என்றால், பெரிய செல்வாக்கு உடையவராக இருந்தாலும், கைவிடப்படுவர்” என பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட எம்.பி-க்கு வாய்ப்பு  வழங்கப்பட்டால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற சூழல் வரும் போது, தேர்தலில் வெற்றிபெறக்கூடிய மற்ற வேட்பாளர் பெயர்களை பரிந்துரைக்கும்படியும், அடுத்த 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்திர பிரதேச பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

“ஆர்.எஸ்.எஸ், கட்சியின் உள் விவகாரங்களில் ஈடுபடுவதில்லை, ஆனால் இந்த கூட்டம் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக இருந்தது, ” என்று ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறினார்.

வரும் தேர்தலில் உத்திர பிரதேச மாநிலம் ஒரு மைய புள்ளியாக இருக்கும். இந்த மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் ஒருங்கிணைந்த தேர்தல் கூட்டணி முயற்சியை எப்படி எதிர்கொள்வது மற்றும் எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் கட்சியின் நடவடிக்கைகளை அதிகரித்து எப்படி வெற்றி பெறுவது என்று ஒவ்வொரு பிரிவின் தலைவர்களுக்கும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற கூட்டத்தின் முக்கிய அம்சமாக, கடந்த தேர்தலில், சொற்ப வாக்குகளில் தோற்று போன இடங்களை கணக்கெடுத்து, அந்த இடங்களில் எதிர் கட்சியில் வலியமையாக யார் இருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற தேர்தலில், பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களின் பல வகையான கூட்டு முயற்சிகளுக்கு இந்த கூட்டம் ஆரம்பமாக இருக்கும் என கருதப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு தற்போதிலிருந்தே ஆலோசனைகளையும், வியூகங்களையும் வகுக்க தொடங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வின் கூட்டு முயற்சிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

Inputs from Economic Times.

Share